செய்திகள்நுவரெலியாமலையகம்

பெருந்தோட்ட துறைக்கான தபால் சேவையை வினைத்திறனாக்குவதற்கு நடவடிக்கை..

பெருந்தோட்ட துறைக்கான தபால் சேவையை வினைத்திறனாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தொகுதி முறையிலான தபால் பெட்டிகளை பெருந்தோட்ட குடியிருப்புக்களில் பயன்படுத்தவுள்ளதாக தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தபால் விநியோக சிக்கல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தபால் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

தபால் ஊழியர்களின் பற்றாகுறை காரணமாகவே பெருந்தோட்டங்களுக்கான சேவையை முன்னெடுப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக பொது இடத்தில் தபால் பெட்டியை நிறுவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அதன்மூலம் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தபால் மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button