மலையகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமை போராட்டத்திற்கு மலையக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஆதரவு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமை போராட்டத்திற்கு மலையக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தமது பூரண ஆதவை நல்குவதாக இலங்கை கல்விச்சமூக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று ஹட்டனில்இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர் சங்கரமணிவண்ணன் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் 23ஆம் திகதி தொழிலாளர்களின் நியாயமன சம்பள உயர்வு கோரிய கம்பனிகளுக்கெதிராக இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆசிரியர் தொழிற்சங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எம் போன்ற சுயதீன ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடந்த காலத்தில் ஏமாற்றப்பட்டதை கசப்பான சம்பவங்கள் என்ற போதும் எம் தொழிலாளர் உறவுகளின் உரிமை போராட்டத்தை ஆசிரியர் சமூகமாகிய நாங்கள் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

எதிர்வரும் 23 ம் திகதி தலவாக்லையில் இடம்பெறவுள்ள தொழிலாளர் உரிமை போராட்டத்திற்கு பல சிவில் அமைப்புகள் பொது நல அமைப்புகள் ஆதரவு நல்க முன்வந்துள்ள நிலையில் ஆசிரியர் தொழிற்சங்கங்ளாகிய இலங்கை கல்விச்சமூக சம்மேளனம்,மலையக ஆசிரியர் விடுதலை முன்னணி, மலையக ஆசிரியர் முன்னணி,ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம் ஆகியன போராட்டத்திற்கு தமது தார்மீக ஆதரவை நல்கும்.

மேலும், மேற்படி போராட்டம் வெறுமனை அரசியல் இலாபமாக பயன்படுமாயின் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் பார்த்துக்கெண்டிருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button