பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி போராட்டத்தில் இறங்கிய கிழக்கு பல்கலைகழக மாணவர்கள்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் இன்று மட்டக்கப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 1000ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தோட்ட தொழிலாளர்களுக்கு அதரவு வழங்கியுள்ளனர்.
இதேவேளை,பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களக்கு அடிப்படை சம்பளமாக 1000ரூபாவை பெறற்றுதரும் படி மலையகத்தில் பல்வேறு பகுதிகளில் கவனயீர்ப்பு கோராட்டங்களை முன்னெடத்துள்ள நிலையில், வடக்கு , கிழக்கு மாகணங்களிலும் சமூகம் சார் அமைப்புக்களும் அவர்களுக்கு ஆதரவு வழங்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.