மலையகம்

பெருந்தோட்ட தொழிளார்களுக்கு ஆதரவு வழங்கி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்: அழைப்பு விடுக்கும் மலையக சமூக ஆய்வு மையம்

பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு 1000 ரூபா வேதன உயர்வு வழங்க கோரி மலையகத்தில் தொடர்போராட்டங்களை  முன்னெடுத்து வரும் நிலையில், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோழ்வியடைந்துள்ளது.

இந்த நிலையில், கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மலைய சமூக ஆய்வு மையம் கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளது.

ஆனால் அந்த கடிதத்திற்கு இன்று வரை எந்த வித பதிலும் கிடைக்க வில்லை என மலைய சமூக ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த மக்களுக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று விரைவில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்க கொழும்பு வாழ் மலையக உறவுகளை மலையக சமூக ஆய்வு மையம் அழைப்பு விடுக்கின்றது.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆரதவு வழங்கி கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களுக்கு மலையக சமூக ஆய்வு மையம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெளியார் உற்பத்தி முறைமை மலையக மக்களின் தேசிய இன அடையாளங்களையும் இருப்பையும் சிதைப்பதற்கான மறைமுகத் திட்டம் என்பதால் அதனை நடைமுறைப் படுத்துவதை தடுத்து நிறுத்துதல் வேண்டும்.

தற்காலிக நலன் கருதி செய்துக் கொள்ளப்படும் புது ஒப்பந்தத்தில்,

தொழிலாளார்களுக்கு வருடத்தில் 300 நாட்கள் வேலை நாட்கள் உறுதி செய்யப்படல் வேண்டும்.

ஊ. சே. நிதி, இ ஊ. ந. நிதி என்பன அடிப்படை சம்பளத்தில் இருந்து அல்ல மாதத்தில் மொத்த சம்பளத்திற்கே கழிக்கப்பட வகை செய்தல் வேண்டும்.

வேலைத் தளங்களில் ஏற்படும் சுகவீனம் ( குளவிக் தாக்குதல், காயங்கள்,விபத்துக்கள்) விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டு சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.

பெண் தொழிலாளார்களின் நலன்கள் விசேட கவனத்தில் கொள்ளப்பட்டு தொழிற்சார் உரிமைகள் பேணப்பட ஆவண செய்தல் வேண்டும்.

இயற்கை அனர்த்த காலங்களில் தொழில் பாதுகாப்பும், நலன்களும், சம்பளமும், விடுமுறையும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

தொழிலாளார்கள் காப்புறுதி திட்டத்திற்குள் உள்வாங்கப்படல் வேண்டும், கழிப்பறைகள், முதலுதவிப் பெட்டிகள் உரிய இடத்தில் வைக்கப்படல் வேண்டும்.

சர்வதேச தேயிலைத் தினம் கம்பனிகளின் சந்தைப்படுத்தலுக்கான தினமாக மட்டுமல்ல தொழில் நலன், உரிமைகள்சார் விழிப்பு நாளாக பிரகடனப்படுத்தல் வேண்டும்.

சம்பள பட்டியல் திருத்தியமைக்கப்பட்டு தேவையற்ற சம்பள கழிவுகள் அகற்றப்படல் வேண்டும்.

ஒப்பந்த பேச்சுவார்தை மற்றும் ஒப்பந்த விடயம் அரசாங்கமும் மூன்றாவது தரப்பாக கைச்சாத்திடப்படுவது கட்டாயமாகும்.

அத்தோடு ஒப்பந்தம் கைச்சாத்திடும் முன்னார் அதன் முழுமையான உள்ளடக்கம், கைச்சாத்திடும் தொழிற் சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் ஒட்டுமொத்த பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தமிழ், சிங்கள மொழிகளில் நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு கருத்தறிவதற்கான போதுமான கால அவகாசம் வழங்கப்படல் வேண்டும்.

எதிர் வரும் காலங்களில்,

மலையக மக்களினதும், பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களினதும் இருப்பு மற்றும் சுய பொருளாதார அபிவிருத்தி அரசியல் அபிலாசைகள் கருதி கூட்டுறவு தொழிற்துறையாக மாற்றியமைக்கப்பட்டு வாழ்வு பாதுகாப்பிற்கான வழி வகைகளை மேற் கொள்ளல் வேண்டும்.

மேற்கொண்ட விடயங்களை கூட்டு ஒப்பந்த பேச்சு வார்த்தையின் போது கவனத்தில் கொள்ளப்பட்டு நடைமுறை சாத்தியமாக்குமாறு மலையகத் தொழிலாளார் வர்க்கம் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button