பெருந்தோட்ட பகுதியில் பாரிய கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை

திம்புள்ள பத்தனை காவற்துறை பிரிவிற்குபட்ட பத்தனை டெவான் பிரதேசத்தில் பெண் ஒருவரால் வீட்டினுள் சட்டவிரோதமாக நடத்திச் செல்லப்பட்ட, பாரிய அளவிலான கசிப்பு தயாரிப்பு நிலையம் ஒன்று விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஜா எல பகுதியை சேர்ந்த பெண் ஒருவரால் நடத்தி செல்லப்பட்ட இந்த கசிப்பு தயாரிப்பு நிலையத்திலிருந்து நேற்றிரவு பத்தனை நாவலப்பிட்டி பிரதான வீதி ஊடாக கொழும்புக்கு 2300 போத்தல்களில் அடைக்கப்பட்ட கசிப்புகளை பாரவூர்தியொன்றில் மூலம் கொண்டு செல்லும் போது நாவலப்பிட்டி நகரில் வைத்து விசேட போதைபொருள் ஒழிப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கசிப்பு போத்தல்களுடன் சாரதி மற்றும் நடத்துனரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் கசிப்பு தயாரிக்கும் இடமான பத்தனை பகுதியை நோக்கி விரைந்துள்ளனர். அங்கு கசிப்பு நிலையத்திற்கு பொறுப்பான பெண் மற்றும் மேலும் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் கசிப்பு தயாரித்து நிரப்பப்பட்ட ஒரு இலட்சத்து 24036 போத்தல்களில் உள்ளடங்கிய 10827 லீற்றர் மதிக்கதக்க கசிப்பு, 48 கசிப்பு பெரல்கள், 10 அடி நீள பிளாஸ்டிக் குழாய், கேஸ் சிலின்டர்கள், துருப்பிடித்த தகரம் உள்ளட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முதல் முறையாக பெருந்தோட்ட பகுதியை உட்படுத்தி பாரிய கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரையும் நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து நாவலப்பிட்டி மற்றும் திம்புள்ள பத்தனை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
https://www.facebook.com/malaiyagam.lk/videos/2573404802674339/