மலையகம்

பெற்றோரே அவதானம் ஹட்டனில் மாணவர்களுக்கு போதைப்பொருள்

ஹட்டன் நகரில் உள்ள பாடசாலைகளின் மாணவர்களை இலக்கு வைத்து போதை மருந்து விற்பனை செய்யும் குழுக்கள் செயற்படுகின்றன.அவ்வாறான குழு ஒன்றிடம் இருந்து ‘மாவா’ என்று அழைக்கப்படும் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை கொள்வனவு செய்த இரண்டு மாணவர்கள் இன்று கைதாகினர்.
ஹட்டன் பேருந்து நிலையத்தில் சிவில் உடையில் நின்று சோதனை நடத்திய காவற்துறையினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.ஹட்டனின் பிரபலமான பாடசாலை ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் இருவரதும் பெற்றோரை அழைத்து எச்சரித்து விடுவிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் குழு குறித்து மாணவர்களின் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு காவற்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தி மூலம்: 5 வரி   http://aivaree.com/

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button