கல்விசமூகம்மலையகம்

பெற்றோர்களை மாலையிட்டு வணங்கிய ஆசிரியர்கள் – கந்தலோயா பாடசாலையில் நிகழ்வு

கந்தலோயாவில், ஓர் புதுமையானதும் தேவையானதுமான நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவான மாணவர்களின் பெற்றோர்களை, அவர்களின் தோட்ட வீடுகளுக்கே சென்று, மாலையிட்டு கைக்கூப்பி வணங்கி, கெளரவத்துடன் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிகழ்வு 12.09.2019 அன்று இடம்பெற்றது .

இந் நிகழ்வை கந்தலோயா பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் நாடாத்தியிருந்தனர்.

இந்த வருடம் உயர்தரத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட அத்தனை மாணவர்களின் வீட்டின் கதவிலும் இந்த வீட்டில் இருந்து ஒரு பிள்ளை உயர்தரத்துக்கு செல்கின்றது என்ற பாதாதை வைக்கப்பட்டிருப்பது என்பது புதுமையான முறைமையில் மாணவர்களையும் பெற்றோர்களையும் உற்சகாப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

வருங்காலங்களில் ஒவ்வொரு மாணவர்களினதும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வியில் அதிக அக்கரை செழுத்துவார்கள் என்பதோடு, ஏனைய பெற்றோர்களுக்கு இவர்கள் முன்னுதாரணமாக திகழ்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download