செய்திகள்

பெற்றோல் வரிசையில் இன்னுமொரு உயிரிழப்பு!

பிலியந்தலை – ஹொரண வீதியில் கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் குளத்தில் இறங்கி முகம் கழுவ முற்பட்டபோது குளத்தில் விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

அங்கிருந்தவர்கள் அவரை பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button