மலையகம்

பெற்ற பிள்ளைகள் கைவிட்ட நிலையில் இறுதி கிரிகளை முன்னெடுக்கும் என்.சி தோட்ட மக்கள்

பொகவந்தலாவை கொட்டியாகலை என்.சி தோட்டப்பகுதியில் அநாதரவாக வாழ்ந்து வந்த நிலையில் உயிரிழந்த வல்லியம்மா வீரய்யாவின் இறுதிக்கிரியைகளை நடத்துவதற்கு தோட்டமக்கள் முன்வந்துள்ளனர்.

தனது மகள் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில், வீரய்யா மற்றும் அவரது மனைவி வல்லியம்மா ஆகியோர் தோட்ட மக்களின் பராமரிப்பில் வாழ்ந்துவந்த நிலையில் வல்லியம்மா நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.

வல்லியம்மாவின் கணவர் வாதநோயினால் பாதிகக்பட்டவரரெனவும், தனது கணவருக்குத் தேவையான அனைத்து பணிகளையும் வல்லியம்மாவே மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.

கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலினால் பாதிக்கபட்டிருந்த வல்லியம்மா நேற்றைய தினம் (07) காலை காலை 08மணி அளவில் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்த செய்தி, பொகவந்தலாவை பொலிஸார் ஊடாக வல்லியம்மாவின் மகளுக்கு தொலைபேசி முலம் தொடர்பு கொண்டு அறிவிக்கப்பட்டதாகவும், எனினும் தாம் கொழும்பில் இருப்பதாகவும் தன்னால் வரமுடியாது அவர் கூறியதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button