மலையகம்

பெல்மோரல் தோட்ட குடியிருப்பில் மின்சார தாக்கம் – லயன் வீடுகள் எரிந்து தீக்கிரை

அக்கறப்பத்தனை பெல்மோரல் தோட்ட குடியிருப்பில் மின்சார தாக்கம் காரணமாக குறித்த லயனில் உள்ள வீடுகள் எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை (13.06.2018) 09 மணி அளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதில் குறித்த வீடுகளில் வசித்தவர்களின் சொத்துக்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது பெல்மோரல் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்னர் என குறிப்பிடப்படுகின்றது .அனர்த்தம் தொடர்பாக பிரதேச போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொன்று வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button