செய்திகள்

பொலிஸ் – கொழும்பு மாநகர சபையின் தடுப்பூசி செலுத்தும் திட்டம்

இலங்கை காவல்துறை மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவற்றினால் நடத்தப்படும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி இன்று காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை முகத்துவாரம் மிஹிஜய சேவன தொடர்மாடி குடியிருப்பு மற்றும் தெமட்டகொடை வித்யாலங்கார பிரிவேனாவில் நிறுவப்பட்ட புதிய மையத்தில் நடைபெறும். 

கொழும்பு நகர எல்லைகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட மக்கள் இதன்போது தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
image download