செய்திகள்

பேக்கரி உணவுகளின் விலை மேலும் அதிகரிக்க கூடிய சாத்தியம் – பேக்கரி உரிமையாளர் சங்கம்!

பேக்கரி உணவுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் பலமடங்கு அதிகரித்துள்ளதனால் பேக்கரி உரிமையாளர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும், இந்நிலைமை தொடருமானால் பேக்கரி உணவுகளின் விலைகளும் அதிகரிக்கலாம் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் 50 கிலோகிராம் கோதுமை மா பொதியொன்றின் விலை தற்பொழுது 1000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.விலைகள் அதிகரித்தால் பொதுமக்களை அது வெகுவாக பாதிக்கும் என தெரிவித்த அவர் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக சுமார் 3000 பேக்கரிகள் அளவில் மூடப்படும் நிலைக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button