செய்திகள்

‘பேசு தமிழா பேசு’ இலங்கையில்

மலேசியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ வானவில்லும் இணையச் செய்தித்தளமான ‘வணக்கம் மலேசியா’வும் இணைந்து ஏற்பாடு செய்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான ‘பேசு தமிழா பேசு’ எனும் அனைத்துலக பேச்சுப் போட்டி இலங்கையின் தலைநகரமான கொழும்பில் நேற்று நடைபெற்றது.இளைஞர்களிடையே பேச்சாற்றலையும் தலைமைத்துவத் திறனையும் வளர்க்கும் நோக்கில் உருவானதுதான் ‘பேசு தமிழா பேசு’

அனைத்துலக ‘பேசு தமிழா பேசு’ பேச்சுப் போட்டி உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான இலங்கை மண்ணின் கொழும்பு 7 நடா மண்டபபதில் நேற்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

பேச்சு போட்டிகளில் பங்குபற்றியவர்களில் இருதி போட்டிக்கு சாருஜன் மெய்யழகன் இலங்கை, உமாபரன் மணிவேல் மலேசியா, நித்யா சைகன் மலேசியா, தமிழ்பரதன் தழிழ்காவலன் கவிதை இந்தியா ஆகியோர் பங்கு கொண்டனர். இவர்களில் இலங்கையின் கண்டி பேராதனை பலகலைகழக மாணவன் சாருஜன் மெய்யழகன் முதலாம் இடத்தையும் ஏனைய மூவரும் அடுத்த இடங்களை சமமாக பெற்றுக் கொண்டனர். வெற்றயீட்டியவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள், சான்றிதழ்கள், நினைவு பரிசில்கள், பண பரிசில்களும் வழங்கபட்டது.

மேலும் இந்த போட்டிகளில் பங்கு பற்றிய 5 நாடுகளின் மாணவர்களும் அதிதிகளும் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கபட்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க இலங்கையின் தேசிய சகவாழ்வு கலந்துறையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர், மனோ கணேசன் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், மலேசிய கல்வி துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதன், ஆஸ்ட்ரோ நிகழ்ச்சியின் நிர்வாக குழும இயக்குனர் டாக்டர் ராஜமணி செல்லமுத்து, உலக அறிவிப்பாளர் அப்துல் ஹமீட், வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்தசாமி, முன்னால் பிரதி பொலஸ் மா அதிபர் அரசரத்தினம், உலக தமிழ் வம்சாவளி அமைப்பு தலைமை ஒருங்கினைப்பாளர் ஜெயா செல்வகுமார் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button