செய்திகள்

பேராதனையில் நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவு …

பேராதனை போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவு இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் திறப்பு விழா இடம்பெறும்.

ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ஒன்றரை கோடி ரூபா செலவில் நடமாடும் சிகிச்சைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது. நோயாளர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில்இ கண்டி மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவு இதுவாகும். இதில் நவீன கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button