செய்திகள்

பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி – 6 பேர் காயம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் நிட்டம்புவ, கலல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். 

இன்று அதிகாலை பேருந்து ஒன்று மோட்டார் வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரில் வந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் பேருந்து தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
விபத்தில் காயமடைந்த இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட 7 பேர் வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன் பின்னர் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார். 
தெஹிவளை பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button