செய்திகள்

பேருந்து பயணிகளுக்கு முக்கிய செய்தி

இணைப்பு 1

பேருந்து பயணக்கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு மாதங்களில் பாரிய அளவில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளது.

இந்தநிலையில் எரிபொருள் விலைக்குறைப்புக்கு ஏற்ப பேருந்து பயணக்கட்டணங்களின் அளவையும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் இன்றைய தினம் நிதி அமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளுடன் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதன், அடிப்படையில் இன்று மாலை பேருந்து கட்டணங்கள் குறித்த அறிவிப்பு வெளியாக்கப்படும் என்று, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இணைப்பு 2

பேரூந்து பயண கட்டணத்தை 4 சதவீதத்தால் குறைக்க தீர்மானம்.

நாளை மறுதினம் நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணத்தை நூற்றுக்கு 4 சதவீதத்தால் குறைக்க இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சு மற்றும் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்திற்கு இடையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் , குறைந்த பட்ச பேரூந்து கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button