செய்திகள்

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் கண்காணிப்பில்..?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை கண்காணிக்கப்படவுள்ளது.

இந்த தகவலை இலங்கை தகவல் தொழினுட்ப நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்ரிய மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஜீவ் யசிரு ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள தேர்தலை இலக்காக கொண்டு ஆயிரக்கணக்கான போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களினூடனூடாக, பல தரப்பினருக்கும் எதிராக அவதூறை ஏற்படுத்தும் மற்றும் குரோதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்கள் வௌியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button