செய்திகள்மலையகம்

பொகவந்தலாவையில் ஒரு பகுதி முடக்கம்

பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட இஞ்சஸ்டி கிராம சேவகர் பகுதி மறுஅறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.

புளியாவத்தை பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் 180 பேருக்கு கடந்த 29 ஆம் திகதி மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில், 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இதனையடுத்து இஞ்சஸ்டி 319 எல் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட இஞ்சஸ்டி மேல் பிரிவு, இஞ்சஸ்டி கீழ் பிரிவு, பிளிங்கிபோனி, அபகனி, ஹென்சி, பீரட், பாத்போட், பிளிங்கிபோனி கடைதெரு மற்றும் புளியாவத்தை நகரமும் முடக்கப்பட்டுள்ளது.

– எமது செய்தியாளர்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com