நுவரெலியாமலையகம்

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்கான 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ சீனாகொலை தோட்டத்தில் தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 19 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸார் இந்த தகவலை எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 16 பெண் தொழிலாளர்களும் 03ஆண் தொழிலாளர்களுமே இவ்வாறு குளவி கொண்டுக்கு இலக்காகிள்ளனர்.

மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தாக்கியதாக காயமடைந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குறித்து எதுவும் அச்சமடைய தேவையில்லை எனவும் காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button