மலையகம்

பொகவந்தலாவையில் குளவி கொட்டு – ஏழுபேர் வைத்தியசாலையில்.

பொகவந்தலாவ பெற்றோசோ தோட்ட பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 பேர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸார் இதனை தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஏழு பேரும் பொகவந்தலாவ, பெற்றோசோ தோட்ட பகுதியில் விவசாய பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சம்பவத்தில் 6 ஆண்களும் 1 பெண் உட்பட 7 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Related Articles

Back to top button