...
செய்திகள்நுவரெலியாமலையகம்

பொகவந்தலாவையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது

பொகவந்தலாவ செல்வகந்தபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களிடம் இருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரனங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen