மலையகம்
பொகவந்தலாவை கோவில்களில் அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு இந்து கோவில்களில் அடையாளம் தெரியாத நபர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கோவிலில் இருந்த தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ள நிலையில், உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், சம்பவம் குறித்து பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.