செய்திகள்

பொகவந்தலாவை- தண்டாயுதபாணி ஆலயம்…

மலையகத்தின் மத்தியிலே கோயில் கொண்ட முருகா
மனங்களிலே நிம்மதியை இருத்திடுவாய் ஐயா
துன்பமில்லை, துயரமில்லை என்ற நிலை வேண்டும்
துணையிருந்து காத்தருள்வாய் எமை நீயே ஐயா..

ஈழத்துப்பழனி என்ற பெருமை கொண்ட முருகா
உன் அடியார் வளமுறவே அருள் செய்வாய் ஐயா
வாஞ்சையுடன் உன்னடியைப் போற்றுகின்றோம் நாமே
சஞ்சலங்கள் அகற்றியெமைக் காத்திடுவாய் ஐயா…

சூரனை அடக்கி அருள் தந்த முருகா
சூழும்பகை, கொடுமைகளை அழித்திடுவாய் ஐயா
ஆறுபடை வீடு கொண்ட முத்தமிழே வேலா
ஆறுதலை எமக்களிக்க ஓடிவா ஐயா

கரங்கள் பன்னிரண்டு கொண்டு அருள்கின்ற முருகா
இரங்கிவந்து எமக்குத் துணை செய்திடுவாய் ஐயா
வல்லமையை நாம் பெறவேயுன் கருணை வேண்டும்
அல்லல் இல்லா வாழ்வுக்கு வழியமைப்பாய் ஐயா..

பசுமைநிறை மலையகத்தில் நின்றருளும் முருகா
பசியற்ற நிலையை நீ உறுதி செய்வாய் ஐயா
வேல்கொண்டு வினை போக்கும் திருமகனே ஐயா…
வெற்றிகளைமட்டுமே எமக்களிப்பாய் ஐயா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com