நுவரெலியாமலையகம்

பொகவந்தலாவை – பொகவான தோட்டம் முத்துலட்சுமி பிரிவு பாதை புனரமைக்கப்படுகின்றது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பொகவந்தலாவை – பொகவான தோட்டம் முத்துலட்சுமி பிரிவு பாதை புனரமைப்பு வேலை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் பயன்படுத்தப்படும் இந்த பாதை பல வருடகாலமாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்பட்டது.

இதன்படி பிரதேச அமைப்பாளர்கள் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த பாதை புனரமைப்பு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button