மலையகம்
பொகவந்தலாவை – ஹட்டன் பிரதான வீதி தாழிறக்கம்
பொகவந்தலாவை – ஹட்டன் பிரதான வீதியின் ஊடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியாத அளவு வீதி முழுமையாக தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதி, நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் தாழிறக்கம் காரணமாக கடந்த சனிக்கிழமை மூடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலையால் வீதி இன்று காலை பாதையின் ஒரு பகுதி சரிவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், அந்த வீதியை பயன்படுத்தும், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த பகுதியில் வசித்த ஆறு குடும்பங்களை சேர்ந்த 23 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.