செய்திகள்

பொகவந்தலாவை-கேம்பியன் தோட்டப் பகுதியில் டிப்பர் வாகனம் குடை சாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு.

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேம்பியன் தோட்டம் ஊடாக  பலாங்கொடை
பகுதிக்கு செல்லும் கேம்பியன் தோட்ட பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று குடை
சாய்ந்ததில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பம் இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த டிப்பர் வாகனத்தில் சென்ற வாகன சாரதி உட்பட பயணித்தவர்களுக்கு
எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பிரதேச போக்குவரத்து போலீசார்
தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இப்பகுதியில் நேற்று (20) முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால்
பொகவந்தலாவை கேம்பியன் பகுதிகளில் பனிமூட்டம் கொண்ட காலநிலை நிலவுவதால்
தோட்டத் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருப்பதாக
தெரிவிக்கப்டுகின்றது.

குறித்த பகுதியில் பாதைகள் புனரமைக்கப்படுவதால் பாதை வழுக்கும் தன்மை
காணப்படுவதால் வாகன சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார்
சாரதிகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

துவாரக்சன்

Related Articles

Back to top button
image download