மலையகம்

பொகவந்தலாவ மக்களின் கோரிக்கை

பொகவந்தலாவ – கெம்பியன் எல்டொப்ஸ் தோட்டபகுதியில் முன்னெடுக்கபடுகின்ற உப மின்சாரநிலைய வேலைதிட்டத்தினால் கேசல்கமுவ ஒயாவின் நீர் மாசடைவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து இந்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

பொகவந்தலாவ கோசல்கமுவ ஓயாவிற்கு அருகாமையில் பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான காணியில் உப மின்சார நிலையம் அமைக்க வேலைதிட்டங்கள் முன்னெடுக்கபட்டு வருகின்றன.

இந்தநிலையில் பெக்கோ இயந்திரங்களை கொண்டு குறித்த பகுதியில் வெட்டபடுகின்ற மண் கேசல் கமுவ ஓயாவில் கலக்கபடுவதானால் கேசல்கமுவ ஓயாவின் நீர்மாசடைகின்றது.

அத்துடன், கால்ரீ நீர்தேக்கத்தில் மண் அள்ளுன்டு செல்கிறது. இரண்டு வருடகாலமாக முன்னெடுக்கபட்டு வருகின்ற உபமின்சார நிலையத்தினால் இதற்கு முன்பும் மண் கேசல்கமுவ ஓயாவில் கலக்கபடுவதால் தோட்டமக்கள் எதிர்பினை வெளிபடுத்தினர்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் வெட்டபடுகின்ற கேசலகமுவ ஒயாவில் கலக்கபடுவதை இடைநிருத்தி இருந்தனர்.

ஆனால் மீண்டும் இந்த திட்டத்தினை மேற்கொள்வோர்கள் காலை வேலையிலே மக்களுக்கு தெரியாமல் பெக்கோ இயந்திரத்தினால் வெட்டபடுகின்ற மண்ணை கேசல் கமுவ ஓயாவில் கலக்கின்றனர்.

கேசல் கமுவ ஒயாவின் நீரினை கெம்பியன் மற்றும் எல்டொப்ஸ் பொகவான நோர்வூட் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் நாளாந்தம் இவர்களுடைய அடிப்படை தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், இந்த விடயம் தொடர்பாக பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் சம்பந்த பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button