செய்திகள்

பொசன் போயா தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகள் 17 பேருக்கு பொதுமன்னிப்பு

பொசன் போயாவை முன்னிட்டு பல வருடங்களாக சிறையிலிருக்கும் 17 அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளார் என இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

பொதுமன்னிப்பு செய்யப்படவுள்ளவர்கள் விடுதலைப்புலிகளிற்காக செயற்பட்டவர்கள் எனவும் அவர்கள் சிறையில் மிக நீண்டகாலம் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 216 பேரின் தண்டனை ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியல் கைதிகள் என்று அடையாளப்படுத்தப்படுகின்ற பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்பில் உள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நேற்றைய தினம் பாராளுமன்றில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தி இருந்தார்.

இந்தநிலையில், அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முறைப்படி இடம்பெறுவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து அமைச்சரவை ஆராய்ந்தது என நீதியமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button