சமூகம்
பொதுத்தேர்தலை நடத்துமாறு வலுயுறுத்தி கிளிநொச்சியில் பேரணி
பொதுத்தேர்தலை நடத்துமாறு வலுயுறுத்தி மகிந்த ஆதரவு அணியினர் கிளிநொச்சியில் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பேரணி இன்று காலை 10 மணிளவில் கிளிநொச்சி காக்கா கடை சந்தியிலிருந்து டிப்போச் சந்திவரை இடம்பெற்றுள்ளது.
பொதுத் தேர்தலை நடத்து, சபாநாயகரே பதவி விலகு, வேண்டும் வேண்டும் மகிந்த வேண்டும், ரணிலே வெளியேறு, போன்ற கோசங்களை எழுப்பியவாறு இந்த பேரணி நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தர்மபால செனவிரத்ன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் இப் பேரணில் கலந்துகொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.