...
செய்திகள்

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு இருக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்றபோதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

நாளாந்தம் பதிவாகும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை சுமார் 200 ஐ தாண்டுமென்றும் நோயாளிகளின் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரிக்குமெனவும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலையடுத்து, பயணக் கட்டுப்பாடுகள் இன்றோ அல்லது நாளையோ விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி புதிய பயணக் கட்டுப்பாடுகள் அல்லது ஊரடங்கு உத்தரவு தொடர்பான முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படலாம். முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பொதுமக்கள் மிக தீவிரமாக பின்பற்ற வேண்டும்.

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்படும்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen