செய்திகள்

பொதுமன்னிப்புக்கு துமிந்த சில்வா எவ்வாறு தெரிவானார்.? : சட்டத்தரணிகள் சங்கம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொலைக் குற்றவாளி என உயர் நீதிமன்றால் தீர்ப்பிடப்பட்டவருமான துமிந்த சில்வா, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.

அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார்? எனவும் இது தொடர்பில் மேலும் பல கேள்விகளை ஜனாதிபதியிடம் முன்வைத்து அவை குறித்த விபரங்களைப் தமக்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட ஏனையவர்கள் தண்டனை அனுபவிக்கும்போது துமிந்த சில்வாவை மாத்திரம் எவ்வாறு அதிலிருந்து விடுவிக்கப்பட்டார் உள்ளிட்ட 6 கேள்விகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடுத்துள்ளது.

இவ்வாறான பொதுமன்னிப்பை வழங்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் காணப்பட்டாலும், அது எப்போதும் சட்டரீதியாகவே அணுகப்பட வேண்டும். கடந்த காலத்திலும் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு எந்த அடிப்படையில் கைதிகள் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்ற விடயம் தெளிவுபடுத்தப்படாமல், சில கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமையும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

Related Articles

Back to top button