செய்திகள்

பொது மக்களுக்கு எச்சரிக்கை.!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 361 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் பொது இடங்களில் நடமாடியமை, விருந்துபசாரங்களில் பங்கேற்றமை, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பந்தையங்களில் கூடி இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 44,216 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, வர்த்தகர்கள், திரையரங்குகள், விடுதிகள் என்பன சுகாதார துறையினரால் விடுக்கப்படும் அறிவித்தல்களுக்கு ஏற்பட செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. எனவே, மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button