மலையகம்
பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்திட்டம் திட்டம்
கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக மலையக மகளீர் அமைப்புகள் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துண்டுபிரசுரம் விநியோகிக்கும் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த திட்டம் கடந்த 3ஆம் திகதி நுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பொது மக்களுக்க துண்டுபிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
இதனை மீனாட்சி அம்மாள் மகளீர் அமைப்பு ,மலையக பண்பாட்டு பேரவை ,மலையக ஊடகவியாளர்கள் சங்கம் ,மலையக மகளீர் ஒன்றியம்,நுவரேலியா மாவட்ட இளைஞர்கள் ,யுவதிகள் இணைந்து ஏற்பாடு மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, பெருந்தோட்ட தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.