அரசியல்செய்திகள்

பொது மக்களை பாதுகாப்பதே எனது நோக்கம் – சஜித்.

நாட்டு மக்களின் சுய கௌரவத்தை பாதுகாத்து கொள்கைகளுக்கு மதிப்பளித்து செயற்படுவதே தனது எதிர்பார்ப்பு என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிபிலை நகரில் இன்று இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ருபோதும் சர்வதேச நாடுகளுக்கு அடிமையாகி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க போவதில்லை எனவும் இதன்போது சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலேயே தமது வெளிநாட்டு தொடர்புகள் அமையும் எனவும் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட போவதில்லை எனவும் அவர் அதன்போது கூறியுள்ளார்.

பொது மக்களை பாதுகாப்பதே தமது முதன்மை நோக்கம் அதனை நெஞ்சில் ஆழத்தில் இருந்து சொல்ல விரும்புவதாகவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download