செய்திகள்
பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவித்தல்

மத்திய, ஊவா, சபரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணாங்களில் சில இடங்களில் 150 மில்லி மீட்டர் வரை மாலை பொழுது, கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனிடையே இடியுடன் கூடிய மழை பொழியும், பிரதேசங்களில் கடும் காற்று வீச கூடும் என்பதன் காரணமாக பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டல திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, நேற்று இரவு நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.