அரசியல்செய்திகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டதாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில், நீதிமன்ற தடையுத்தரவை மீறி பங்கேற்றிருந்தவர்களுக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் மாவட்ட காவல்துறை நிலையங்களினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பான ஆவணங்களை முல்லைத்தீவு காவற்துறையினர், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவினுள் குறித்தப் பேரணி பயணிப்பதற்கு காவற்துறையினர் நீதிமன்றில் தடையுத்தரவைப் பெற்றிருந்த நிலையில், கடந்த 5ம் திகதி அங்கு பேரணி நடைபெற்றிருந்தது.

இந்தநிலையில் அதில் கலந்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய ஆவணம், நீதிமன்றில் முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த வழக்குகள் மீதான விசாரணையை எதிர்வரும் ஜுன் மாதம் 17 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button