செய்திகள்

பொத்துவில் ரொட்டைக்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு …

பொத்துவில் ரொட்டைக்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ரொட்டைக்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நேற்று நீரில் மூழ்கியுள்ளனர்.

பிரதேச மக்களால் இருவரும் மீட்கப்பட்டு பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் பகுதியை சேர்ந்த 30 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதுடன் சடலம் பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button