செய்திகள்

பொய்யான செய்தியை பரப்பியவர் மீது விசாரணை.

(மாதுருபாகன் ராகவ்)

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொய்யானதும்
போலியானதுமான செய்தியை சமூக ஊடகங்களில் பரப்பிய நபர் தொடர்பில் விசாரணைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை
தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் மே மாதம் 17 ஆம் திகதி வரை நாடு முழுவதும் ஊரடங்குச்
சட்டம் அமுலாகும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்
கூறினார்.

அந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை எனவும் இந்த நடவடிக்கை
சட்டவிரோதமானது எனவும் அவர் கூறினார்.

அவ்வாறான செய்தியை இணையத்தளங்களில் பதிவேற்றிய நபர்களை இனங்கண்டு அவர்களுக்கு
எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com