செய்திகள்

பொரளை குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீப் பரவல் கட்டுக்குள் வந்தது..

கொழும்பு, பொரளை – கித்துல்வத்த பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டது.

தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கொழும்பு மாநகரசபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்திருந்தன.

இதனையடுத்து, தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தெரியவராத நிலையில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button