செய்திகள்

பொரளை பிரதான தபால் காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளங்காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொரளை பிரதான தபால் காரியாலயத்தின் கீழ் இயங்கும் மேலும் 03 உப தபால் காரியாலயங்களையும் தற்காலிகமாக மூடியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த இரு கொரோனா நோயாளர்களுடன் தொடர்புகளை பேணியோருக்கான பீ.சி.ஆர் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதான மற்றும் உப தபால் நிலையங்களை, தொற்று நீக்கத்திற்கு உட்படுத்திய பின்னர் விரைவில் மீளத்திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க மேலும் கூறியுள்ளார்.
..

Related Articles

Back to top button
image download