செய்திகள்

பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் விநியோக சேவைகளுக்காக முன்னர் வழங்கப்பட்ட பயண தடை அனுமதிப் பத்திரம் ஜூன் 21 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீன், இறைச்சி, மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள குறித்த அனுமதிப்பத்திரத்தை, உரிய பிரதேசத்தில் மாத்திரம் தமது சேவைகளை மேற்கொள்ள பயன்படுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த அனுமத்திப் பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button