செய்திகள்

பொலன்நறுவை- வானவன் மாதேவீஸ்வர சிவன் திருக்கோயில் 

சோழமன்னர் ஆட்சியிலே அமைந்த திருக்கோயில் 
செந்தமிழன் சிறப்புரைக்கும் சிவனார் கோயில் 
நம்தமிழர் வரலாற்றில் உள்ள கோயில்- எங்கள் தமிழ் 
மாமன்னர் அமைத்த வானவன் மாதேவீஸ்வர சிவனார் கோயில்
பொலன்நறுவை பெருநிலத்தில் அமைந்த கோயில் 
புகழ் பூத்த பெருமன்னன் இராஜேந்திரசோழன் கோயில் 
அன்னவனின் அன்னை பெயர் கொண்ட கோயில் 
அதுவே வானவன் மாதேவீஸ்வர சிவனார் கோயில் 
ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் அமைந்த கோயில் 
ஆதியிலே நம்மிருப்பைக் காட்டும் கோயில் 
கருங்கல்லால் உருவான கருங்கற் கோயில் 
காலத்தால் அழியாத வானவன் மாதேவீஸ்வர சிவனார் கோயில்
உறுதியுடன் நிலைத்திருக்கும் இந்தக் கோயில் 
உலகிற்கு எம்மிருப்பின் எடுத்துக்காட்டு
கானகத்தில் காட்சிதரும் குறித்த கோயில் 
வரலாற்றை வெளிப்படுத்தும் வானவன் மாதேவீஸ்வர சிவனார் கோயில்
மூலவராய் சிவனமர்ந்த புனித கோயில் 
அம்மையுமையும்  உடன் அமர்ந்த எங்கள் கோயில் 
வளமுடனே வாழ்ந்த தமிழர் வரலாற்றைக் கூறும் கோயில் 
மனதிற்கு இதமளிக்கும் வானவன் மாதேவீஸ்வர சிவனார் கோயில்
துணிவுதந்து எழுச்சி தரும் சிவனார் கோயில் 
வளமுடனே நாம்வாழ அருளும் கோயில் 
தளர்வில்லா வாழ்வுக்கு உதவும் கோயில் 
ஈசன் வானவன் மாதேவீஸ்வர சிவனார் கோயில்.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button