செய்திகள்

பொலித்தீன் பைகள் மீதான தடை!!!


அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொலித்தீன் பைகளை தடை செய்வதற்கான முதல் கட்ட திட்டத்தை அமுல்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க சுற்றுச்சூழல் அமைச்சு மேற்கொண்ட திட்டத்தின் பிரகாரம் இந்த முன்மொழிவு செய்யப்பட்டது.

2022 ஜனவரி முதல், 10 அங்குல அகலம், ஐந்து அங்குல ஆழம் மற்றும் 16 அங்குல உயரம் அல்லது அதற்கும் குறைவான பொலித்தீன் பைகளுக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கு பின்னர் மாற்று திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த சுற்றுச்சூழல் அமைச்சர், மாற்று வழிகள் இல்லாவிட்டாலும் தடை அமுல்படுத்தப்படும் என கூறினார்.

இலங்கையில் ஆண்டுதோறும் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பொலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுவதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button