செய்திகள்

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : மேலும் 351 கைது. !

முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் நேற்றைய தினமும் மேலும் 351 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 7 ஆயிரத்து 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் தரப்பினரை சுற்றிவளைக்கும் செயற்பாடு இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை உரிய வகையில் பின்பற்றுவது அவசியம் என மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com