சமூகம்

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

உடவளவை சரணாலயத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மான் வேட்டைக்கு சென்ற இருவரை கைது செய்வதற்கு உடவளவை சரணாலயத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மீது அவர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்முள்ளார்.

இதன்போது பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் உடவளவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபர், கொலை சம்பவம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர் எனவும், இராணுவத்தின் விஷேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மற்றுமொரு சந்தேகநபர் கொலை செய்த மான்கள், ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் அதற்கான தோட்டாக்கள் 27 உடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button