செய்திகள்

பொலிஸார் எச்சரிக்கை : நேற்றும் 322 பேர் கைது.!

பொது மக்கள் தங்களின் அன்றாட நடவடிக்கையின் போது சுகாதார வழிமுறைகளைச் சரியான முறையில் பின்பற்றாத நிலை காணப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 322 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 48,244 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதில் 41,000 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலிலேயே உள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button