செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து

சகல பொலிஸ் அதிகாரிகளதும் விடுமுறை உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படும் வரையில் கடமைக்கு சமுகமளிக்க தேவையில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்று நிலமையினை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com