செய்திகள்

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் விளக்கமறியலில்!

நேற்றைய தினம் 04/12 பசறை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் பொலிஸ் அதிகாரியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபரை பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 22 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமையினால் அதனை விசாரிக்க சென்ற அருகில் காவல் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரை சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

காயமடைந்த காவல் துறை அதிகாரி செல்லக் கதிர்காமத்தை வதிவிடமாக கொண்டவர் என்பதும் திஸ்ஸமஹாராம காவல் நிலையத்தில் கடமையாற்றி கடந்த 04/03 திகதியே பசறை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தி ராமு தனராஜா

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com