செய்திகள்

பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கைதிகள் தப்பினர்..?

பொலிஸ் பாதுகாப்பின் கீழ், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர், வாகனங்களின் பாகங்களை திருடியமை தொடர்பில் பாணந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றைய சந்தேகநபர், போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் திடீர் சுகயீனம் காரணமாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button