செய்திகள்

போகம்பறை சிறைக்கைதிகள் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம்.

பழைய போகம்பறை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர் கூரை மீதேறி எதிர்ப்பு
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையிலுள்ள அனைத்து கைதிகளுக்கும்
பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள
சிறைக்கைதிகள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும் கைதிகளுக்கு நாளாந்தம் பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெறுகின்றமை
உறுதி செய்யப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பிரபல சிங்கள
தொலைக்காட்சியொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் கைதிகளுக்கு 100 முதல் 150 பி.சி.ஆர்
பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார
உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button